June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பகவான் மஹாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் 24.01.2026 அன்று 30ஆம் ஆண்டு
முத்து விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வேலூர்
மாவட்ட ஆட்சியர் திருமதி.V.R.சுப்புலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி
விழாவினை துவங்கி வைத்தார். பெற்றோர்கள் தங்களது பரபரப்பான வேலைகளுக்கு இடையில்
குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்கி, சத்தான உணவுகளை வழங்கி, அவர்களின் வெற்றிக்கு
உறுதுணையாக இருந்து, இந்நாட்டிற்கு சிறந்த குடிமக்களை உருவாக்கி தர வேண்டும் என்று
சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய நல்ல கல்வியை கற்று, தங்கள்
வாழ்வில் வெற்றிப் பெற வாழ்த்தினார்..
பள்ளியின் சேர்மன் ஸ்ரீ. M.விமல்சந்த் ஜெயின் அவர்கள் மற்றும் பள்ளியின் தலைவர்
ஸ்ரீ.V.திலிப்குமார் ஜெயின் அவர்களும் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
பள்ளியின் செயலாளர் ஸ்ரீ.K.இராஜேஷ்குமார் ஜெயின் அவர்கள் ஆண்டு விழாவில்
கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு வாழ்த்து
தெரிவித்தார்.
அறக்கட்டளை உறுப்பினர்கள் ஸ்ரீ.N.ஸ்ரீபால் குமார் ஜெயின், ஸ்ரீ ஆனந்த்சிங்வி,
ஸ்ரீ K.ஆனந்த்குமார் ஜெயின் மற்றும் ஸ்ரீ. S.நவீன்குமார் ஜெயின் அவர்களும் கலந்து கொண்டு
விழாவை சிறப்பித்தனர்.
பள்ளியின் கல்வி ஆலோசகர் திருமதி.R.கீதா வரவேற்புரையாற்ற, பள்ளியின் முதல்வர்
திருமதி.M.மாலதி ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
இவ்விழாவில் அனைத்து வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பாட
வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு கோப்பையும் சான்றிதழும்
வழங்கப்பட்டது.
மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளான ஆடல், பாடல், நாடகம் போன்றவற்றை
சிறப்பாக நடித்தும், நடத்தியும் காட்டினர். உதவும் உள்ளங்கள் திரு.இரா.சந்திரசே�