புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.V.P.ராமலிங்கம், Ex-MLA அவர்கள், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பாரம்பரிய முறையில் தாமரை தைப்பொங்கல் திருவிழா – 2026 நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை மாநில பாஜக மகளிர் அணி தலைவி திருமதி.தாமரைச்செல்வி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தைப்பொங்கல் என்பது தமிழர்களின் வேளாண்மை மரபு, உழைப்பின் பெருமை மற்றும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டை வெளிப்படுத்தும் மகத்தான திருவிழாவாகும். இந்த பாரம்பரிய விழாவின் உண்மையான அர்த்தத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் பாஜக இந்த விழாவை முன்னெடுக்கிறது.
இந்த விழாவை அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் தாங்கள் தங்கள் சட்டமன்ற தொகுதிகளில் தலைமையேற்று, மக்களுடன் இணைந்து மாபெரும் தைப்பொங்கல் திருவிழாவாக கொண்டாட உள்ளனர்.
இந்த தைப்பொங்கல் திருவிழா மூலம்,தமிழர் கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒற்றுமை மற்றும் மக்கள் நல உணர்வை வலுப்படுத்தி, பாஜக மக்கள் இயக்கமாக புதுச்சேரி முழுவதும் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதே முக்கிய நோக்கமாகும். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.மொத்தமாக 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். செய்தியாளர் சந்திப்பின்போது மகளிர் அணி மாநில பொறுப்பாளர் திருமதி. ஜெயந்தி, மகளிர் அணி மாநில துணைத் தலைவர்கள் திருமதி.மஞ்சு, திருமதி.மீனா, மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர்கள் திருமதி. விஜயலட்சுமி, திருமதி பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
விவேகானந்தர் அவர்களின் 163-வது பிறந்த நாளை முன்னிட்டு,
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில்“யுவா சமேவ்ஷ்” மற்றும் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், இளைஞர் அணியின் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்க உள்ளனர். இந்த யுவா சமேவ்ஷ் கூட்டத்தில், 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இந்த விழாவில் அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இளைஞர்களை ஊக்குவித்து சிறப்பிப்பார்கள் இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!