February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சியின் மாநில குழு முடிவின்படி.

மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர்.தோழர்.செ.ராஜ்குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி

மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை நகரப் பகுதியில் இருக்கக்கூடிய ரயில் நிலைய அடிப்படை வசதி குறித்தும்,பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் நகரச் செயலாளர் தோழர். P.பாலு தலைமையில் மாவட்ட செயலாளர். வழக்கறிஞர்.செ.ராஜ்குமார் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு ரயில் நிலையத்தில் 7.1.2026 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மணப்பாறை ரயில் நிலைய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பொழுது 24 மணி நேரத்திற்கு மணப்பாறையை 50 ரயில்கள் கடந்து செல்கிறது.

மணப்பாறை சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் கூடுதல் ரயில் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ரயில்வே தொழிலாளர்கள் குடியிருக்க கூடிய ரயில் நிர்வாக குடியிருப்பு வீடுகள் மழை காலங்களில் வீட்டின் மேற்கூரிலிருந்து மழைநீர் வீட்டிற்குள் வருவதாகவும், குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லை என்றும், ரயில்வே நிர்வாகம் தற்பொழுது தொழிலாளர்களை 12 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

மணப்பாறை ரயில் நிலையம் Amrit Bharat station scheme (ABSS) திட்டத்தின் படி மணப்பாறை ரயில் நிலைய மேம்பாட்டிற்காக RS.10.5 கோடி செலவு செய்யப்பட்டிருந்தாலும் அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாமல் பயணிகளுக்கு குடிப்பதற்கு குடிநீர் கூட இல்லாமல், பயணிகளையும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல்துறை யாரும் இல்லாமலும் செயல்படுகிறது என்று
CPI (ML ) கட்சியின் ஆய்வின் போது தெரிய வந்துள்ளது.

மேலும் ரூ.10 கோடி ரூபாய் மணப்பாறை ரயில் நிலையத்திற்கு முழுமையாக செலவிடப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது

மேலும் மணப்பாறை ரயில்வே சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்படும் அளவிற்கு சரியான முறையில் திட்டமிட்டு கட்டிக் கொடுக்காமல் சாக்கடை நீர் சென்று வருவதற்கு ஏதுவாக அமைத்துள்ளனர் இதனையும் CPI(ML) கட்சி ஆய்வு செய்துள்ளது.

மணப்பாறை ரயில் நிலைய அடிப்படை வசதிகள் குறித்து மணப்பாறை சட்டமன்ற தொகுதி பொதுமக்களும் பயணிகளும் தெரிவித்த கருத்து மற்றும் கள ஆய்வின் அடிப்படையில்..

1.செந்தூர் விரைவு வண்டி, 2.அத்தியோதயா விரைவு வண்டி,
3.பொதிகை விரைவு வண்டி,
4.தேஜாஸ்ரீ விரைவு வண்டி
5.நெல்லை விரைவு வண்டி 6.கன்னியாகுமரி விரைவு வண்டி.
7.ஆனந்தபுரி விரைவு வண்டி

  1. ஹவுரா விரைவு வண்டி ஆகிய எட்டு ரயில்களும் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கையோடு திருச்சியிலிருந்து மதுரை வரையும் மதுரையிலிருந்து திருச்சி வரையும் அனைத்து ரயில் நிலையம் நின்று செல்லும் அளவிற்கு விவசாயிகள், தொழிலாளிகள், கிராமப்புற மக்கள் பயன்படும் அளவிற்கு சென்னையில் ஓடுவது போல எலக்ட்ரிக் லோக்கல் ட்ரெயின் விட வேண்டும் என்று கோரிக்கையோடு

CPI(ML) கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர். ராஜ்குமார் தலைமையில்

மணப்பாறை நகர செயலாளர் P. பாலு

மற்றும்
மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் தங்கராஜ் தோழர் மணிகண்டன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் பெருமாள் ஆகியோர் இணைந்து.

ரயில்வே நிர்வாக குழு உறுப்பினரும், CPI(ML) கட்சியின் பீகார் மாநிலம் கராகட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். சுதாமா பிரசாத் MP அவர்களை 8-1-2026 அன்று மதுரையில் நேரில் சந்தித்து.

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி ரயில்வே நிர்வாக அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்திட கோரியும்

கூடுதல் ரயில் நின்று செல்ல வேண்டும்.

ரயில்வே தொழிலாளர் உடைய கோரிக்கை மற்றும் அடிப்படை வசதி உடனடியாக மேம்படுத்தி கொடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ரயில்வே நிர்வாக குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர்.சுதாமா பிரசாத் MP அவர்கள் ரயில்வே நிர்வாக குழுவிலும், நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதி அளித்துள்ளார்

Facebook
YouTube
Instagram
WhatsApp