June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர்

அரியலூர் – சோளக்கொல்லையை திரும்பிப் பார்க்க வைத்த மக்காச்சோள கதிர்களால் உருவாக்கப்பட்ட ஒற்றை வீடு: ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து மகிழும் வாகன ஓட்டிகள்.
 


அரியலூர் மாவட்டம் ஓட்டகோவில் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கமலவேணி. இருவரும் இணைந்து தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில்  மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர் 
 
சோளக்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் தனியார் சோள விதை நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி முத்துச்சாமி மற்றும் கமலவேணி விவசாய தம்பதியை அணுகி தங்களது நிறுவனத்தின் சார்பில் மக்காச்சோளப் பயிர் சாகுபடி குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக உங்களது நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா? என அனுமதி கேட்டுள்ளார்.
கமலவேணி மற்றும் முத்துசாமி இருவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சோளக்கதிர்களை விதை நிறுவனத்தின் சார்பில் தனியே அறுவடை செய்து, அந்த சோளக்கதிர்களைக் கொண்டே சாலை ஓரத்தில் வீடு போன்ற மாதிரி வடிவமைப்பை தத்ரூபமாக செய்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள இந்த விவசாய நிலத்தை கடந்து செல்லும் பார்வையாளர்கள் அனைவரும், திடீரென தங்கள் பகுதியில் மக்காச்சோள கதிர்களால் உருவாக்கப்பட்ட இந்த வீட்டை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பலர் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, விவசாய நிலத்திற்குள் வந்து மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள இந்த சோள வீட்டை பார்த்து அதிசயத்தை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன் தாங்களும் அதன் முன்னாள் நின்று செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.