February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வடமதுரை பத்திர பதிவு அலுவலகத்தில் போலி பட்டாக்கள் போடப்படுவதாகவும் மேலும் நிரந்தரமான சார்பதிவாளரை நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வாக்குவாதம்.

திண்டுக்கல் ஜனவரி 6

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றது
மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது
இந்த நிலையில் இன்று 50க்கும் மேற்பட்டோர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பத்திர பதிவு செய்யவில்லை எனவும் மேலும் நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து பதிவு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தனர்
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை
மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பல்வேறு பத்திரப்பணி வேலைகள் முடக்கம் அடைந்துள்ளது
மாதத்திற்கு ஒரு சார்பதிவாளர் இந்த அலுவலகத்தில் மாற்றப்படுவதால் தான் இந்த முறைகேடுகள் நடைபெறுகிறது உடனடியாக நிரந்தரமாக சார்பதிவாளர் நியமனம் செய்ய வேண்டும் நிரந்தர பணியாளர், நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும் கொடுக்கப்படும் மனுக்களுக்கு ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனால் சிறிது நேரம் பத்திர அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Facebook
YouTube
Instagram
WhatsApp