புதுச்சேரி:
முதலியார்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ விநாயகா முருகன் ஸ்வீட்ஸ் & பேக்கரி நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் திரு. P. ராஜசேகர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று (05.01.2026) கடைபிடிக்கப்பட்டது.
தலைவர்கள் அஞ்சலி:
இந்நிகழ்வில், முன்னாள் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. பாஸ்கர் அவர்கள் கலந்துகொண்டு, மறைந்த P. ராஜசேகர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி அவர்களும் நேரில் வருகை தந்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
நிறுவனர் திரு. P. ராஜசேகர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து ஸ்ரீ விநாயகா முருகன் ஸ்வீட்ஸ் & பேக்கரி கிளைகளிலும் இன்று ஒரு நாள் முழுவதும் பால், காபி மற்றும் டீ ஆகியவை பொதுமக்களுக்கு இலவசமாக (பிரசாதமாக) வழங்கப்படும் என்று நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
திரு. P. ராஜசேகர் அவர்களின் மனைவி திருமதி. சுபா ராஜசேகர், மகன்கள் திரு. சதீஷ் மற்றும் திரு. கிஷோர் ஆகியோர் முன்னின்று முதலியார்பேட்டை தலைமையகத்தில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.
தங்கள் தந்தையின் நினைவாக மக்கள் சேவையைத் தொடரும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நற்பணிகளில் அரசியல் பிரமுகர்கள், வணிகப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்