காரைக்கால்:
காரைக்கால் மாவட்டம் மேல காசாக்குடி அகரம் பகுதியில், சமூக சேவகி கார்குழலி மாரிமுத்து அவர்களின் முயற்சியால் “பசுமைத்தாய்” என்னும் புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்வாக, விதைப்பந்துகள் தயாரிப்பதற்கான பிடிமண் வாங்கும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
நெடுகாடு பகுதி முழுவதையும் பசுமை நிறைந்த இடமாக மாற்றும் உயரிய நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வில் சேகரிக்கப்பட்ட மண்ணைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான விதைப்பந்துகள் தயாரிக்கப்பட உள்ளன.
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பிடிமண்ணைக் கொண்டு விதைப்பந்துகள் உருவாக்கப்படும்.
இந்த விதைப்பந்துகள் மழைக்காலத்தை முன்னிட்டு நெடுகாடு ஒன்றியம் முழுவதும் உள்ள தரிசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் ஓரங்களில் வீசப்படும்.
இதன் மூலம் அப்பகுதியில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இயற்கை சமநிலையைப் பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பிற்குப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. “மண்ணையும் இயற்கையையும் காப்பதே நம் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் ஆகச்சிறந்த கைமாறு” என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கார்குழலி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!