June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கத்தாழம்பட்டு, கணியம்பாடி புதூர் ஊராட்சிகளில் புதிய உடற்பயிற்சி கூடங்களை ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திறந்து வைத்தார்.

வேலூர், டிச 21 –

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கத்தாழம்பட்டு, கணியம்பாடி புதூர் ஊராட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடங்களை ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இவ்விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தங்கம்மாள் கோவிந்தன் தலைமை வகிக்க, கணியம்பாடி ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகி புருஷோத்தமன் அனைவரையும் வரவேற்று பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

இதில் கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திவ்யா கமல் பிரசாத் கணியம்பாடி ஒன்றிய திமுக செயலாளர் விபிஎஸ்.கலைச்சந்தர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேவி சிவா, ஊராட்சி மன்ற தலைவர் நதியா உமாபதி துணைத்தலைவர் செந்தில்குமார் வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இவ்விழாவில் கணியம்பாடி ஒன்றிய
திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதே போன்று கணியம்பாடி புதூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சந்தோஷ்குமார் தலைமை வகிக்க ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திறந்து வைத்தார்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.வி.சீனிவாசன், மணிமேகலை ஜெயக்குமார், ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், சரவணன், கோட்டீஸ்வரன், சங்கர், சாமிநாதன், அண்ணாமலை, வெங்கடேசன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.