வேலூர், டிச 21 –
வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற நிறுவனர் (Founders Day) தின விழாவையொட்டி ஏழை பள்ளி மாணவர்களின் உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை, முதியோர்களுக்கு மதிய உணவை மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் வழங்கினார்.
இவ்விழாவையொட்டி மருத்துவமனை ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு கலாச்சார போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
இதில் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலும், நாட்டில் பசுமையை பற்றிய விழிப்புணர்வு. உலக சமத்துவம், மதங்களுக்கு இடையே சகோதரத்துவம், போதை ஒழிப்பு, உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்வில் நறுவீ மருத்துவமனை நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்து பாராட்டி பேசுகையில்
நிறுவனர் தின விழா என்பது நறுவீ குடும்ப விழாவாகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இம்மருத்துவமனை உங்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக படிப்படியாக இம்மருத்துவமனை உயர்ந்து வருகிறது.
மேலும் அரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் கிரிட்டிகளான அறுவை சிகிச்சைகள் நவீன முறையில் சிறப்பாக செய்வதின் மூலம் நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையை பாராட்டி வருகின்றனர். இங்கு மருத்துவ சிகிச்சை என்பது வணிக ரீதியானாது அல்ல, உன்னதமான அர்பணிப்புடன் நோயாளிகளை காப்பாற்றும் பணியாக செய்யப்படுகிறது.
மேலும், நமது மருத்துவ சேவைகள் பற்றி அனைவரும் அறிந்திடும் வகையில் நாம் அதிக அளவில் சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டும். இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களின் வாழ்க்கை முறை மாறி வருகிறது. மது மற்றும் போதைக்கு அடிமையாகி வரும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில் மருத்துவ பணியாளர்கள் இளைஞர்களுக்கு மது மற்றும் போதையினால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துரைத்து நல்வழிபடுத்த வேண்டும் என்று பேசினார்
இந்த விழாவில் மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் திலீப் மத்தாய், பொது மருத்துவ நிபுணர் டாக்டர் குணசேகரன், மயக்கவியல் நிபுணர் டாக்டர் சரவணன் அங்கிசெட்டி, தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் இராமன் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மருத்துவமனை மனிதவள பொது மேலாளர் லலிதா அனைவரையும் வரவேற்க, முடிவில் தலைமை செவிலியர் அலுவலர் மேரி மர்ஜெரி நன்றி தெரிவித்தார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்