தொழிற்போட்டியில் வியாபாரி கொலை
திண்டுக்கல், தேனி வாலிபர்கள் 5 பேருக்கு 10 ஆண்டு சிறை
வடமதுரை, டிச.20-
மதுரை மாவட்டம் கீழதோப்பு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் பாண்டி. இவரும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காசா நகர் பகுதியை சேர்ந்த அரவிந்த், அவரது தம்பி விஜயபாண்டி ஆகியோர் சேர்ந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் இடைத்தரகர்களாக வேலை பார்த்து வந்தனர்.
தொழில்போட்டியில் கொலை
இந்நிலையில் தொழில் – போட்டி காரணமாக அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையை பேசி தீர்ப்பதற்காக கடந்த 9.11.2019 அன்று திருச்சிக்கு காரில் அழைத்து வந்தனர். மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில்
பகுதியில் அரவிந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் ஜெகதீஷ் பாண்டியன் காரை மறித்து ஜெகதீஷ் பாண்டியனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெகதீஷ் பாண்டியன் உயிரிழந்தார். அவருடன் வந்த அவரது அண்ணன் சசிகுமார் வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பினார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து மணப்பாறை போலீசார் 14 பேர் பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு திருச்சி மாவட்டம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த கொலை வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த அங்குசாமி மகன் அரவிந்த்
(வயது 31), திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த நாகசாமி மகன் முத்துவேல் (34),திருச்சி எடமலைப்பட்டி புதூரை ராமச்சந்திரா பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் பாதுஷா (37), திருச்சி கருமண்டபம் சக்தி நகரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆனந்த் (45), தேனி பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் மதன் குமார் (31) ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்துள்ளார். முதல் எதிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், மற்ற 4 பேர்களுக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம். விதித்து தீர்ப்பளித்தார்.
இதனை அடுத்து அவர்கள் 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!