17.12.2025 இன்று சுமார் 1.00 மணி அளவில் அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபம் அருகில் உள்ள பெரிய சைடு வாய்க்கால் பசுமாடு அதிகாலையில் தவறி விழுந்து உள்ளது அதனை இப்பொழுது பார்த்தவுடன் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது உடனே அங்கு வந்த ஊழியர்கள் அரியாங்குப்பம் காவல்துறை ஆய்வாளர் இடம் தொடர்பு கொண்டு தீயணைப்பு துறை வரவழைத்து வெகு நேரமாக உயிருக்கு போராடிய அந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர் விரைவாகவும் அந்த பசு மாட்டுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது இது பெரு உதவியாக இருந்த இளநிலை பொறியாளர் சுரேஷ், செழியன் அவர்களுக்கும் காவல்துறை தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றேன் மேலும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு ஏழை மக்கள் கட்சி சார்பாக எனது பணிவான வேண்டுகோள் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பசு மாடு வளர்ப்பவர்கள் தங்களது பாதுகாப்பான இடத்தில் அதை வளர்க்க தெரிவிக்க வேண்டும் மேலும் மீறினால் அவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி! ஏழை மக்கள் கட்சி நிறுவனர் பூக்கடை கமலக்கண்ணன் .


More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!