June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி காவல் நிலையம் அருகே கால்வாயை கடந்த ஒரு வருடமாக மூடாமல் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு- நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் செஞ்சி D1 காவல் நிலையம் அருகாமையில் செஞ்சி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவலர்கள் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய சாலையாக உள்ளது.

இந்நிலையில் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து அருகாமையில் இருக்கக்கூடிய செஞ்சி காவல் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் செல்கிறது.
அந்த கழிவு நீர் கால்வாயில் கடந்த ஆண்டு பெஞ்சல் புயலால் மழையின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் கால்வாயின் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொண்டு இருந்தனர்.

ஒரு வருட காலமாகியும் இதுவரையிலும் அந்த கால்வாயை மூடாமல் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் செஞ்சி காவல் நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதியில் கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையம் வந்து மனு அளித்து தங்களது பிரச்சினைகளை தீர்த்து வரும் நிலையில் காவல் நிலையம் உள்ளே நுழைவாயிலில் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இது குறித்து பலமுறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலையிட்டு அந்த கால்வாயை முழுவதும் மூடி துர்நாற்றம் வீசாத அளவிற்கு உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.