February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏற்காட்டு பள்ளி விடுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி சோதனை

டிசம்பர் : 10

சேலம் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில், ஏற்காட்டில் உள்ள பள்ளிகளின் விடுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஆய்வின்போது பயன்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் சமைக்கப்பட்ட உணவுகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பின்னர் அவை விரிவான பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டன.

சமையலறையின் சுத்தம், சமையல் பாத்திரங்களின் பராமரிப்பு, உணவு தயாரிக்கும் இடத்தின் சுகாதார நிலை போன்ற அம்சங்கள் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டன. கூடுதலாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா, சுத்திகரிக்கப்பட்ட நிலையில்தான் வழங்கப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்தனர்.

உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி விடுதிகளுக்கு தேவையான உரிய அனுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்ற விவகாரமும் கவனமாகச் சரிபார்க்கப்பட்டது.

பின்னர், உணவு தயாரிப்பு பணியாளர்களுக்கு உணவு கையாளுதல், சுத்தம், தரநிலைப் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் எளிமையான முறையில் விளக்கப்பட்டன. பாதுகாப்பான உணவு விநியோகத்தை தொடர்ந்து உறுதி செய்ய, பள்ளி நிர்வாகத்தினருக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்கினார் வழங்கினார். ஏற்காடு வட்டாரத்தின் உணவு பாதுகாப்பு அலுவலர் சி.சேஷாத்ரிகிருஷ்ணன்..

Facebook
YouTube
Instagram
WhatsApp