June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இந்திய கலாச்சார நட்புறவு கழகதிருச்சி மாவட்ட இரண்டவது மாநாட்டில் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழா

மணப்பாறை நவ 09

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஜெய் நகர் காமராஜர் திருமண மண்டபத்தில்    இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் இரண்டவது  மாநாடும்  பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழாவும் நடைபெற்றது,

இரு நிகழ்வுக்கும் பாலசுப்பிர
மணியன் தலைமை வகித்தார்

பாரதி கலைக் குழுவினரின் பாடல்களுடன் விழா தொடங்கியது,

மாநாட்டை தொடங்கி வைத்து மாநில தலைவர் சௌமா.
இராஜரெத்தினம் சிறப்புரை நிகழ்த்தினார்.

மாநாட்டை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் சுப்புராமன், கவிஞர் கலியமூர்த்தி, எழுத்தாளர் ஜவகர் ஆறுமுகம் , ஆறுமுகம் ,, லோகநாதன், டாக்டர் ரம்யா , மணி , செல்வராஜ் ஆகியோர் உரை நிகழ்தினார்கள்,

 மாநில துணை பொதுச் செயலாளர் இந்திரஜித் கியூபாவுக்கு 1959 ல் தான் சுதந்திரம் கிடைத்தது இந்த நாட்டை வென்றெடுத்தவர் பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவை ஒட்டியுள்ள ஒரு சின்னஞ் சிறு நாடு. உலக வரை படத்தில் ஒரு கெண்டை மீன் போல தெரியும். இந்த கியூபா உலக நாடுகளுக்கு இன்று வழி காட்டி வருகிறது. 
கியூபா நாட்டில் அனைவருக்கும் உணவு  கல்வி ,மருத்துவ வசதிகள் இலவசமகா கிடைகின்றனா ‌. 
உலகிலேயே அதிக மருத்துவர்கள் நிறைந்த நாடு கியூபா. தங்கள் மக்களுக்கு இலவச மருத்துவம் தருவதோடு , உலகில் வேறு எந்த நாட்டுக்கு மருத்துவர்கள் தேவைப் பட்டாலும் உடனே தனது மருத்துவர்களை அனுப்பி உதவுகிறது நாடு. அங்கே எந்த பற்றாக் குறையும், தட்டுப்பாடு  இல்லை. தன்னிறைவு. இப்படி ஒரு நாட்டை வடிவமைக்க கியூபா மக்கள் பிடல் காஸ்ட்ரோவுக்கு துணையாக நின்றனர்.  மாவீரர் சேகுவேரா வும்  துணையாக இருந்தார். இத்தகைய பேராற்றல் மிக்க பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டை இம்மாநாடு கொண்டாடுவாது சிறப்பு மிக்கது என்று  உரை நிகழ்த்தினார், 

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

தலைவராக. எம்.பாசுப்பிரமணியன் துணைத்தலைவர்களாக
ஸ்கோப் சுப்புராமன்
வை.ஜவகர் ஆறுமுகம் கார்முகில்
பிரான்சிஸ் எம்.சுப்பிரமணி
செயலாளராக. உ.பக்கிரிசாமி
துணைச்செயலாளர்களாக;
ஜெயக்கொடி ஜனசக்தி உசேன்
டாக்டர் ரம்யா வி.அறிவழகன்
மனிதம் தினேஷ்
பொருளாளராக அ.சேசுராஜ்
நிர்வாக குழு உறுப்பினர்களாக
செல்வராஜ்,வைசூர்யா, ரேணுகா ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டை ஒட்டி உலக அமைதி பற்றிய ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மணவை பொண் மாணிக்கம் எழுதிய அன்புள்ள அம்மா இந்திரஜித் எழுதிய திருச்சி வரலாறு நூல்கள் சான்றிதழ் கேடையம் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இந்திய கலாச்சார நட்புறவு கழக திருவெறும்பூர் நிர்வாககுழு உறுப்பினர் சூர்யா நன்றி கூறினார்.