July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் – திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்

அரியலூர் அண்ணா சிலை அருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியுய் செயலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் அப்பொழுது திடீரென அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு தேர்தல் அறிக்கையில் திமுக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர் அப்போது பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்