தஞ்சை,டிச-5
தஞ்சையில் இயங்கி வரும் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை மேலும் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியைச் சேர்ந்த 75 வயது பெண்மணிக்கு திடீர் மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாக
தஞ்சை ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கு உறவினர் மூலம் அழைத்துவரப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த இருதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் அப்பெண்ணிற்கு இதய துடிப்பு மிக குறைவாக இருப்பதாகவும் அவசர நிலையில் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தார்.
மேலும் உறவினர்களின் ஒப்புதலின்படி அப்பெண்மணிக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டதில் அவருக்கு இதயத்துக்கு ரத்தம் வழங்கும் ரத்த நாளங்கள் செயலிழந்து உள்ளதை அறிந்தனர்.
துரிதமாக தற்காலிக இருதய பேஸ்மேக்கர்கருவியை பொருத்தி உயிரை காப்பாற்றினார்.
மேலும் இதயத்தின் செயல்பாட்டை சரி செய்ய
ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையின்
இருதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர். இளங்குமரன் அவர்களின் தலைமையிலான மருத்துவ குழுவைக் கொண்டு,
உலகத்தரம் வாய்ந்த கேத்லாப் அரங்கில் உயர்தர உபகரணங்களை பயன்படுத்தி
இருதய நுண் துளை இரத்த குழாய் மூலம் மிகச்சிறிய நிரந்தர பேஸ் மேக்கர் கருவியான மிக துல்யமாகவும் குறுகிய நேரத்திலும் இரத்தக் குழாய் வழியாக இருதயத்திற்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
பேஸ்மேக்கர் என்பது மிகவும் சிறிய வடிவம் கொண்டது. மற்றும் இதில் பேட்டரி கிடையாது.
அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சைக்குப் பின்னர் பெண்மணிக்கு சுவாச நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு,
இருதயத் துடிப்பு சீராக இருந்தது. மேலும் அவருக்கு உரிய மருத்துவம் அளித்து நலமோடு வீடு திரும்பினார்.
தனக்கு மறுபிறவி தந்த ஸ்ரீ காமாட்சி மருத்துவமனையின்
இருதய மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் இளங்குமரன் மற்றும் மருத்துவ குழுவினருக்கு தனது மனமார்ந்த நன்றியினை அப்பெண்மணி தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் முதன்முறையாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட பேஸ் மேக்கர் போன்ற கருவி பயன்படுத்தி இருதய சிகிச்சை அளிப்பதில் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை முன்னோடியாக உள்ளது என்பது பெருமைக்குரியது
இந்த நிகழ்வின் போது மருத்துவமனை மூத்த ஆலோசகர் டாக்டர். மோகன்,
துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.
தீபக்நாராயணன்,
மற்றும் இருதய மருத்துவம் மற்றும் எலக்ட்ரோ பிசியோலேஜிஸ்ட் மருத்துவர் அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
தஞ்சை மாவட்ட செய்தியாளர்
மா.மதிவதனன்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!