எந்த நிபந்தனைகள் இன்றி சங்கத்தின் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வலியுறுத்தல்
சங்க தேர்தலில் சாத்தியமற்ற இலவச வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்
சாக்கு வியாபாரிகள்
சங்கத்தின் பொதுக்குழு மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்!!
டிச:02
கோயமுத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்கத்தின் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பல்வேறு முரண்பாடுகளை தீர்க்கும் விதமாக பொதுக்குழு உறுப்பினர்களால் கடந்த சில மாதங்களுக்கு
முன்பு சமாதான குழு தேர்வு செய்யப்பட்டது..
கிருஷ்ணன் மற்றும் காதர் ஆகியோர் தலைமையில் சமாதான குழுவினர் இரு தரப்பினர் இடையே பல்வேறு கட்டங்களாக கடந்த மூன்று மாதமாக பேச்சு வார்த்தை நடத்தினர் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தினால்..
இந்நிலையில் இதன் இறுதி கட்டமாக சங்கத்தின் செயல்பாடுகளை இனி வரும் காலங்களில் சிறப்பாக முன்னெடுக்கும் விதமாக சங்கத்தின் பொதுக்குழு மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் போத்தனூர் வசந்தம் மகால் அரங்கில் நடைபெற்றது.
சமாதான குழு தலைவர்கள் கிருஷ்ணன் மற்றும் காதர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக 150 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..
சமாதான குழுவினர் மேற்கொண்ட முயற்சியில் உபைதுர் ரஹ்மான் தரப்பினர் வைத்த நிபந்தனைகளால் சமரசம் ஏற்படாத நிலையில்,சமாதான குழு கூட்டத்தில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
அதன்படி,
இரு தரப்பையும் சாராத 32 பொதுக்குழு உறுப்பினர்கள் சமாதான குழுவில் இணைத்து மீண்டும் சமரசம் முயற்சி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது..
உபைதுர் ரஹ்மான் தலைமையிலான நிர்வாகத்தின் பதவி காலம் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ந் தேதியோடு முடிவடைந்து இருப்பதால், இனி புதிதாக தேர்வு செய்யப்படும் நிர்வாகம் பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும்,
சங்க தேர்தலில் வெற்றி பெற சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளிக்க கூடாது,
இரு தரப்பின் மீது எந்தவித நடவடிக்கையும் இன்றி அனைவரும் இணைந்து செயல்படுவது,
சங்கத்தின் எல்லா சட்ட திட்டங்களிலும் பொது குழு உறுப்பினர்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்குவது,உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் சங்க கட்டிடத்தை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்..

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!