திருவண்ணாமலை மாநகராட்சி அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயில் 2025 ஆம் ஆண்டு திருகார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கிவரும் அரசு சில்லறை மதுபானக் கடை எண்: 9481 (காமராஜர் சிலை அருகில்) கடை எண்: 9261 (மணலுார்பேட்டை சாலை) கடை எண்: 9490 (அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் ) மற்றும் சமுத்திரம் கிராம கடை எண். 9476 ஆகிய 4 டாஸ்மாக் கடைகளும்,
02.12.2025 நண்பகல் 12.00 மணி முதல் 04.12.2025 அன்று இரவு 10.00 வரை 3 நாட்கள் மற்றும் திருவண்ணாமலை நகரத்தின் உள்பகுதியில் இயங்கிவரும் மதுபானக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள், முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி, உரிமம் பெற்ற மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு 02.12.2025 அன்று காலை 10.00 மணி முதல் 04.12.2025 அன்று இரவு 10.00 வரை 3 நாட்களுக்கு மதுவிற்பனை நடைபெறாமல் மூடிவைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்