கள்ளக்குறிச்சி மாவட்டம், மணிமுக்தா அணையில் (29.11.2025
பிற்பகல் 4.00 மணிக்கு நீர்மட்டம் 25.00 அடி ஆகவும், நீர்வரத்து வினாடிக்கு 100
கனஅடி (cusecs) ஆகவும் பதிவாகியுள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் டிட்வா புயலின் காரணமாக மழை பெய்து வருவதால், பழுதடைந்த பழைய கதவுகளின் தாங்கும் திறனை கருத்தில் கொண்டும், அணை மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கனஅடி அளவிற்கு உபரிநீர் வெளியேற்றப்படும்.
மேலும், நீர்வரத்து நிலைமையைப் பொருத்து நீர் வெளியேற்ற அளவு
படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் மணிமுக்தா ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீர்வளத்துறை சார்பில்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மணிமுக்தா ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில்
இறங்கவோ/ குளிக்கவோ/ துணி துவைக்கவோ/ ஆடு, மாடுகளை குளிக்க
வைக்கவோ/ ஆற்றை கடக்கவோ கூடாது. மேலும் ஆறுகளின் ஓரத்தில் செல்பி
எடுத்தல் உள்ளிட்ட தேவையற்ற செயல்களையும் முற்றாக தவிர்க்க வேண்டும் என நீர்வளத்துறை கள்ளக்குறிச்சி வெள்ளாறு வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்