July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்களுக்கு சம்மந்தப்பட்ட தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டுஅறையை தொடர்பு கொள்ளலாம் – மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல்.

கள்ளக்குறிச்சி டிச 01

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்
கடந்த 4ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணி தொடர்பாக கணக்கீட்டுப்
படிவங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து மீள பெற்று BLO APP-ன் மூலம்
பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி நிறைவடையும் தருவாயில்
உள்ளதால் பூர்த்தி செய்த படிவங்களை மீள ஒப்படைக்காத வாக்காளர்கள் 04.12.2025
வரை காத்திருக்காமல் உடன் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO)
ஒப்படைக்குமாறும், அவ்வாறு ஒப்படைக்காத வாக்காளர்களின் பெயர் வரைவு வாக்காளர்
பட்டியலில் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்களுக்கு
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை தொடர்பு 616001.1950,
77-உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி தொடர்பு எண்.04149-222255, 78-ரிஷிவந்தியம்
சட்டமன்றத் தொகுதி தொடர்பு எண்.04151-235400, 79-சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி
தொடர்பு எண்.04151-235329, 80-கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்றத் தொகுதி தொடர்பு
எண்.04151-222449 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள்
பயன்பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.