February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றுபவர்கள் செவிலியர்கள்: ஆரணி எம்பி புகழாரம்

வந்தவாசி, நவ 28:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஆசியன் இன்ஸ்டிடியூட் மையத்தின் 19 ஆவது பட்டமளிப்பு விழா சேத்பட் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு முகமது இஸ்மாயில் நினைவு அறக்கட்டளை நிறுவனர் டி.எம். பீர்முகம்மது தலைமை தாங்கினார். அகாடமி நிறுவனர் பீ.ரகமத்துல்லா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, ஆரணி எம்பி எம்.எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டயச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் செவிலியர் பயிற்சி பெற்ற நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை புரிய உள்ளீர்கள். எனவே உங்கள் சேவை இன்றைய சூழலில் அனைவருக்கும் தேவைப்படும் நிலையில் உள்ளது. மருத்துவர்களை காட்டிலும் செவிலித்தாய் என்று அழைப்பது உங்களுக்கான அங்கீகாரம் என்று பாராட்டினார். மேலும் பல்திறன் செயல்பாட்டு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார், டாக்டர் எஸ். சுதாகரன், டாக்டர் கே.செல்வமுத்து குமாரசாமி, டாக்டர் ஆர்.முனுலட்சுமி, டாக்டர் கோகுலகிருஷ்ணன், டாக்டர் ஆர்.ஹாரூன் ரஷுத் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் தயாளன், நகர் மன்ற துணைத் தலைவர் அன்னை சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் பலரும் பங்கேற்றனர். ஆசிரியைகள் ஜாய் ஜான்சிராணி, சுருதி, ஜெநசீர் பானு, சரண்யா ஆகியோர் நிகழ்வை தொகுத்து வழங்கினர். இறுதியில் அகாடமி தாளாளர் ஆசியா பர்வீன் நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp