February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆதார்சேவை மையங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த்தகவல்.

கள்ளக்குறிச்சி நவ 23

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV) சார்பில் ஆதார் நிரந்தர பதிவு மையங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், கல்வராயன்மலை, உளுந்தூர்பேட்டை, வாணாபுரம் ஆகிய 7 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
அலுவலகம், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், இளவனாசூர்கோட்டை ஊராட்சி மன்ற
அலுவலகம் ஆகிய இடங்களில் ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் வங்கிகளின் கீழ் செயல்படும் மையங்கள் கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, சிட்டி யூனியன் வங்கி, சங்கராபுரம் இந்தியன் வங்கி, செங்குறிச்சி சிட்டி யூனியன் வங்கி, உளுந்தூர்பேட்டை பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் ஆதார்
பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தபால் நிலையங்களில் கீழ் செயல்படும் மையங்கள் சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி 04, வாணாபுரம் 03
(மூங்கில்துறைபட்டு, ரிஷிவந்தியம், அரியலூர்), திருக்கோவிலூர் – 02, உளுந்தூர்பேட்டை – 03 (களமருதூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர்) ஆகிய பகுதிகளிலும் ஆதார் பதிவு மையங்கள்
செயல்பட்டு வருகின்றன.

மேலும் டிஜிட்டல் இந்தியா (CSC) திட்டத்தின்கீழ் செயல்படும் ஆதார் சேவை மையங்கள் சின்னசேலம் – 01, சங்கராபுரம் 02 ( சங்கராபுரம், ஆலத்தூர்), கள்ளக்குறிச்சி நகரம்-03,
உளுந்தூர்பேட்டை- 05 (உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி, பிடாகம், காட்டுச்செல்லூர், ஆசனூர்)
ஆகிய பகுதிகளிலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் (ICDS – 0 முதல் 5 வயது குழந்தைகளுக்கான பதிவு) சின்னசேலம் 03, கள்ளக்குறிச்சி – 03, சங்கராபுரம் – 02, வாணாபுரம் – 02, திருக்கோவிலூர் – 01, கல்வராயன்மலை -01, உளுந்தூர்பேட்டை 01 ஆகிய
பகுதிகளில் ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கண்ட அனைத்து ஆதார் சேவை மையங்களிலும் ஆதார் நிரந்தர பதிவு, தொலைபேசி எண் இணைத்தல்/ மாற்றுதல், முகவரி திருத்தம்,
பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புதிய ஆதார் பதிவு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் உள்ள ஆதார் சேவை மையங்களில் தங்கள்
ஆதார் தொடர்பான பணிகளை மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp