சேலம் விவசாயிகள் ஹேப்பி பறந்து வந்த தேதி.
சேலம்:விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 30 வரை கால நீட்டிப்பு செய்த அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்ன தெரியுமா?
தமிழகத்தில் குறுவை சாகுபடி முடிந்து டெல்டா பகுதியில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சம்பா, தாளடி பயிர்களுக்கான பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தஞ்சையின் பல பகுதிகளில் நாற்று விடுதல், பாய் நாற்றங்கால், நாற்று நடும் பணி, உரம் தெளித்தல் உட்பட பல்வேறு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
குறுவை சாகுபடி அதிகமான விளைச்சல் ஏற்பட்டு கொள்முதல் நிலையங்களில் குவிக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படாமலும், மழையில் நனைந்து அழுகியும், பயிர் முளை விட்டும் மற்றும் ஈரப்பதம் காரணமாக ஏராளமான விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
பயிர் காப்பீட்டு தேதி நீடிப்பு
அதுமட்டுமல்லாமல், வாக்காளர் தீவிர சரிபார்ப்பு இயக்கத்தில் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் மும்முர பணியில் ஈடுபட்டுள்ளதால் காப்பீடு செய்ய தேவையான பட்டா,சிட்டா விவசாயிகளுக்கு வழங்க முடியவில்லை.. இதனால் பயிர் காப்பீடு செய்வதற்கும் காலதாமதம் ஆகிறது.
ஏற்கனவே குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பா, தாளடி பயிர்களுக்கான பயிர் காப்பீடு உரிய காலத்தில் செய்ய முடியாத நிலைமை உள்ளதால் 30ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படியே, 30ம் தேதி வரை கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அவகாசம் நீட்டிப்புக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தன்னுடைய நன்றியை அரசுக்கு தெரிவித்துக் கொண்டுள்ளது..
மகிழ்ச்சியில் சேலம் விவசாயிகள்
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.. அதாவது, ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நடப்பாண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தை சேலம் மாவட்டத்தில் M/s.சேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (Kshema General Insurance Limited) நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில், “ரபி பருவத்தில் தட்டைப்பயறுக்கு 30.11.2025. சோளம் 16.12.2025 நிலக்கடலைக்கு 30.12.2025, நெல்-III 31.1.2026 எனவும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு பிரிமீயத் தொகையாக ஒரு ஏக்கர் நெல்-|| க்கு ரூ.568/-, மக்காசோளம்-|| ரூ.482/-, பருத்தி-|| ரூ.680/-, நிலக்கடலைக்கு ரூ.326/-, சோளம் ரூ.150/-. தட்டைப்பயறு ரூ.252/- நெல்-III ரூ.568/-செலுத்தி உரிய காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஜனவரி 31 வரை அவகாசம்
அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட பிர்க்காவில் உள்ள விவசாயிகள், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகம் நகல், ஆதார் அட்டை நகல், பயிர் சாகுபடி அடங்கல், விண்ணப்ப படிவம் மற்றும் முன்மொழிவுப் படிவம் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத் தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்து இயற்கை இடர்பாடு ஏற்படும் காலத்தில் உரிய காப்பீட்டுத் தொகை பெற்று பயனடையலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வருகிற ஜனவரி 31ம் தேதி, நெல்-III 31.1.2026 என்று காலக்கெடு நிர்ணயம் செய்திருப்பது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!