வந்தவாசி, நவ 22:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காமராஜர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா வட்டார கல்வி அலுவலர் ஆர்.செந்தமிழ் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் தயாளன், நூலாசிரியர் கவிஞர் கன்னிகோவில் இராஜா, வட்டார கல்வி அலுவலர் எம்.தரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஆ.சித்ரா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்பி எம்.எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, மாணவர்களின் தனித் திறன்களை பற்றியும், அரசுப் பள்ளி மாணவர்கள் நூல் எழுதும் வல்லமை பெற்றவர்களாக இருப்பது தமிழகத்திற்கு மட்டுமின்றி, வந்தவாசிக்கே பெருமை என்று பாராட்டினார். மேலும் தொழிலதிபர் கவிஞர் இஷாக், நகராட்சி ஆணையர் ஆர்.சோனியா, ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், பிஆர்டி பார்த்திபன், ஒன்றிய செயலாளர் பெருமாள், நகர் மன்ற தலைவர் எச்.ஜலால், துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், கவுன்சிலர்கள் எம்.கிஷோர்குமார், மகேந்திரன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், எக்ஸ்னோரா மலர் சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். நூல் எழுதிய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்வை பள்ளி ஆசிரியை கண்மணி தொகுத்து வழங்கினார். இறுதியில் ஆசிரியை சாந்தகுமாரி நன்றி கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!