February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 57 ஏரிகளில் மீன்பாசி குத்தகை ஏலம் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல்.

கள்ளக்குறிச்சி நவ 22

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி வட்டத்தில் முடியனூர், நாகலூர், குரூர், திம்மலை, வாழவந்தான்குப்பம், மாடூர், பெருவங்கூர், பிரிதிவிமங்கலம்,
ஏமப்பேர், சிறுவங்கூர் ஆகிய 10 ஏரிகளும், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் வெள்ளையூர், ஆத்தூர்பெரியஏரி, அலங்கிரி, அரளி, ஆசனூர், காட்டுநெமிலி, ஏ.புத்தூர், குஞ்சரம், மேட்டத்தூர், பு.கிள்ளனூர், பூ.மலையனூர், பரிக்கல், பில்லூர், செம்பியன்மாதேவி,
செங்குறிச்சி, டி.ஒரத்தூர், உடையானத்தம், உதுப்பூர், கொரட்டூர், மடப்பட்டு, பாலி,
காட்டுஎடையார், களமருதூர் ஆகிய 24 ஏரிகளும்,
திருக்கோவிலூர் வட்டத்தில் ஆவிகொளப்பாக்கம், எடையூர், எல்ராம்பட்டு,
குலதீபமங்கலம், முதலூர், திருப்பாலப்பந்தல், தகடி, மாடம்பூண்டி ஆகிய 08 ஏரிகளும், சங்கராபுரம் வட்டத்தில் மஞ்சப்புத்தூர், தண்டலை, பூட்டை ஆகிய 03 ஏரிகளும், வாணாபுரம்
வட்டத்தில் அரியலூர், அத்தியூர், கடம்பூர், கடுவனூர், பாசார், பாக்கம், பாவந்தூர்,
திருவரங்கம், வாணாபுரம், சித்தப்பட்டிணம், பல்லகச்சேரி, ரிஷிவந்தியம் ஆகிய 12 ஏரிகளும்
என மொத்தம் 57 ஏரிகள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு
ஒப்பந்தப்புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை விடப்பட உள்ளன.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி
இயக்குநர் அலுவலகம், நெ.62/56A, தாட்கோ வளாகம், விழுப்புரம்-605 602,
fishermenwelfarevpm@gmail.com என்ற இணையதளத்திலும், 04146-259329 என்ற
தொலைபேசி எண்ணிலும், விழுப்புரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி
இயக்குநர் அலுவலகத்தை அணுகிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்
எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp