அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடி என்னும் இடத்தில் தனியார் பள்ளி வேன் முன்னால் சாலையோரத்தில் நின்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டிருந்த.
போது
மற்றொரு தனியார் பள்ளிவாகனம் மோதியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த பள்ளி மாணவ மாணவிகள் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளியின் வேன் ஓட்டுனரை அந்த பகுதி பொதுமக்கள் பிடித்து அவர் மது போதையில் ஏதும் வாகனத்தை ஓட்டினார் என்பது குறித்து விசாரித்ததோடு காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் தனியார் பள்ளி வேன் ஓட்டுனரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காயம் அடைந்த குழந்தைகள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தனியார் பள்ளி வேன் ஓட்டுனரின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் நல்வாய்ப்பாக குழந்தைகளுக்கு பெரிய அளவிலான காயங்கள் ஏதுமில்லை எனவும் தெரிய
வந்துள்ளது.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்