வந்தவாசி, நவ 19:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சபரிராஜ், க.வாசு, செந்தில்குமார், ராஜேஷ், இப்ராகிம், ரகுபாரதி, ஆசிரியைகள் சாந்தி, மணிமேகலை மற்றும் மேனாள் சங்க மாநில பொறுப்பாளர் கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்