February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

முதலிபாளையத்தில் ஐம்பெரும் விழா

நவம்பர் 17

திருப்பூர் முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் முதலிபாளையம் ஊராட்சியில் மாமன்னர் ராஜராஜசோழன் சதய விழா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மருது பாண்டியர்கள் குருபூஜை விழா வாளுக்கு வேலி அம்பலம் ஜெயந்தி விழா வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள் விழா என ஐம்பெரும் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் முன்னதாக சிட்கோவில் இருந்து நான்கு ரோடு சந்திப்பு வரை தலைவர் வீ.டி.பாண்டியன். செயலாளர் பசும்பொன் பாலு.பொருளாளர் கொம்பையா தேவர் உள்ளிட்ட தலைவர்களை
ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது பின்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்பு நிகழ்ச்சி நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் நிர்வாகிகள் ராமலிங்க தேவர்.செல்லதுரை ரமேஷ் குமரேசன் வேல் குமார் நந்தகுமார் சுப்புராம் ஒர்க்ஷாப் ராஜா கர்ணா மூர்த்தி போலீஸ்கார்த்திக் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேவரின சொந்தங்கள் பெருந்திரளாக பங்கேற்றனர் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது குழந்தை செல்வங்கள் வருகை தந்த தலைவர்களை சிலம்பாட்டம் சுற்றி வரவேற்றது அனைவரது பாராட்டையும் பெற்றது

Facebook
YouTube
Instagram
WhatsApp