February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் மாவட்டத்தில்போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம் உறுதிதொழிமாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தலைமையில் ஏற்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம் உறுதிமொழி (நசா முக்த் பாரத் உறுதிமொழி) மாவட்ட ஆட்சித்தலைவர்இரத்தினசாமி, தலைமையில் அரசு அலுவலர்களால் இன்று (18.11.2025) ஏற்கப்பட்டது.

அதன்படி “இளைஞர்கள் எந்த நாட்டின் வளர்ச்சிக்கும் முதன்மை சக்தி, சமூகத்தையும் நாட்டு முன்னேற்றத்தையும் உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது. எனவே அதிக அளவில் இளைஞர்கள் நஷா முக்த் பாரத் (மயக்கம் இல்லா இந்தியா) இயக்கத்தில் கலந்து கொள்வது மிகவும் அவசியமானது.

நமது நாட்டின் இச்சவாலை ஏற்று, இன்று நாம் அனைவரும் நஷா முக்த் பாரத் இயக்கத்தின் கீழ் ஒன்றுபட்டு, நமது சமூகத்தையும். குடும்பத்தினரையும், நண்பர்களையும் மட்டுமல்லாமல், நாமும் நிச்சயமாக போதைப் பழக்கத்திலிருந்து விலகி இருப்போம் என்று உறுதி மேற்கொள்கிறோம். ஏனெனில் மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும்.

ஆகையால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது அரியலூர் மாவட்டம்/ தமிழ்நாடு-ஐ போதை இல்லா மாவட்டம் / மாநிலமாக மாற்ற உறுதியான முடிவெடுக்கலாம்.

என் நாட்டை போதை இல்லா நாடாக மாற்றுவதற்காக என் திறன் மற்றும் முயற்சியில் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்று நான் உறுதிப்பட தெரிவித்துக்கொள்கிறேன்” என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் .மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்..சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .பரிமளம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் .சரவணன், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp