252 மனுக்கள் வரப்பெற்று மேல் நடவடிக்கைகளுக்கு உத்தரவு..
ஈரோடு. நவ 18
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து மனுக்களை கொடுத்தனர்.
வாரம் தோறும் திங்கள் கிழமை காலை பொதுமக்களுக்கான மக்கள் குறைதீர்க்கும் முன்னால் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர்சு. சாந்தகுமார் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அந்த வகையில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 252 மனுக்கள் வரப்பெற்று மேல் நடவடிக்கைகளுக்கு. உத்திரவிடப்பட்டது.
பொதுமக்கள் அளித்த மனுக்களில், பட்டா, இலவச வீட்டு மனை கோருதல், வீட்டுமனை பட்டா, மற்றும் விதவைகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களின் கீழ் நிதி உதவி கோருதல், பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை கோருதல் உள்ளிட்ட மனுக்கள் பொதுமக்களால் கொடுக்கப்பட்டது.
மற்றும் மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகை கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை உள்ளிட்ட மனுக்களும் பொதுமக்களால் கொடுக்கப்பட்டது.
மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
நேற்று நடந்த இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( பொது) முகமது குதுரத்துல்லா சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!