வந்தவாசி, நவ 18:
வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம்(VISTAS), பல்லாவரம் சென்னை-117 சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றியம் ஆதிதிராவிடர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, திரக்கோயில் கிராமத்தில் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான DST SEED STI HUB மையம் ( DST/SEED//SCSP STI / 2022/937) மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தின் “சிறந்த பயிர் அமைப்பு முறை நுட்பங்களை பின்பற்றுவதற்கான பயிற்சி” 2025 நவம்பர் 15 & 16ஆம் தேதிகளில் வந்தவாசி அடுத்த தெள்ளார் வட்டம் VISTAS DST SEED STI- HUB மையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியரும், இயந்திரவியல் துறை இயக்குனருமான முனைவர் எம்.சந்திரசேகரன் நிகழ்வை தொடங்கி வைத்து இந்த மையத்தின் சாதனைகளையும், விவசாயிகள் அதிகப்படியான லாபங்கள் ஈடுட்டும் முறைகளை விளக்கினார். DST SEED STI – HUB திட்டத்தின் ஆலோசகரும், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர் எம்.பாஸ்கரன் தொடக்க விழாவினை கௌரவித்து,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு விதமான பயிர் அமைப்பு முறை தொழில் நுட்பங்களை விளக்கி, அதிகப்படியான லாபம் ஈட்டும் பயர்களை உற்பத்தி செய்து விளைபொருட்களை மதிப்புக் கூட்டி லாபம் ஈட்டும் முறைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.
இரண்டாம் நாள் பயிற்சியினை வேல்ஸ் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முனைவர் எம்.குமரேசன் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக முனைவர் எம்.அன்பரசு ஆகியோர் வேளாண்மையில் பல்வேறு விதமான பயிர்களையும், அதில் லாபம் ஈட்டுவது பற்றியும் செயல் விளக்கம் அளித்தனர். மேலும் இப்பயிற்சியில் DST STI- HUB திரக்கோயில் கிராமத்தில் பணி புரியும் இரா.விஜயகுமார், வி.லக்ஷ்மி, பூவரசன், பிரசாந்த், இளையபெருமாள் மற்றும் ஏ.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் தெள்ளாறு ஒன்றியத்தின் கிராமங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.இறுதியில் STI HUB திரக்கோயில் முனைவர் சம்பத்குமார் நன்றி கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!