June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு ஒருங்கிணைந்த வணிக வளாகம் வியாபாரிகள் ஏழு அம்ச கோரிக்கை வலியுறுத்தி..

கடைகளை அடைத்து உள்ளிருப்பு போராட்டம்..

ஈரோடு. நவ. 16

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஜவுளி வலாக வியாபாரிகள் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஜவுளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 2 40 கடைகளை அடைத்து ஜவுளி வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில்.

இவர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த வணிக வளாகத்தின் முகப்பு வாயிலை அகலப்படுத்தி தரவேண்டும், 2022 மற்றும் 23 ஆண்டில் கட்டிட பயன்பாட்டிற்கும் முன்பே வசூலித்த, பிப்ரவரி மற்றும் மார்ச் மாத வாடகை தொகையை கழித்து தொடர்ந்து வாடகை செலுத்த வகை செய்ய.

ஜவுளி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் வாடகையை குறைத்து தர.

வணிக வளாகத்திற்கு பொருட்கள் வாங்க வரும் வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வளாகத்தின் மேல் பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

வணிக வளாகப் பகுதியில் சுற்றி ஏவாரிகளை பாதிக்கும் வகையில் எந்தவித சாலை ஓர தற்காலிக கடைகளை நடத்த அனுமதிக்க கூடாது.

வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு போதுமான பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி. தர வேண்டும்.

வணிகவளாக உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் போதுமான மின் விளக்குகள் அமைத்து.
தர வேண்டும். கழிவறைகளை சரியான முறையில் பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ள நிரந்தரமாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு.

தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வணிக வளாகத்தில் உள்ள 240 கடைகளை அடைத்து வியாபாரிகள் வளாகத்திற்கு உள்ளே, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இது குறித்து தகவல் அறிந்த திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணி நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை. அப்போதே வியாபாரிகள் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென அவரிடம் வலியுறுத்தினர்.

மேலும் தங்களின் ஏழு அம்ச கோரிக்கைகளை ஏழு நாட்களில் நிறைவேற்றி தர வேண்டும் தவறும் பட்சத்தில், அடுத்த கட்ட போராட்டங்களில். ஈடுபடுவோம். என்று வியாபாரிகள் அவரிடம். தெரிவித்தனர்.

இது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.