நாளை திங்கட்கிழமை நடைபெறும் நிலையில் விவசாயிகளுக்கு அழைப்பு..
ஈரோடு,நவ. 16
ஈரோடு அருகே உள்ள கொடுமுடி, அஞ்சூர் பஞ்சாயத்து பகுதியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கால்நடைத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் அஞ்சூர் பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட, நல்ல செல்லி பாளையத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில், விவசாயிகள் தங்களின் கால்நடைகளை அழைத்து வந்து அதற்குரிய சிகிச்சைகளை பெற்று செல்லுமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் பசு, எருமை, ஆடு, கோழி மற்றும் நாய் என கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை மற்றும் சினை பிடிக்காத கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.
மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை விநியோகம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.
மேலும் முகாமில் கன்று பேரணி நடத்தப்பட்டு 3 சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும், கால்நடை வளர்ப்பில் சிறந்த விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு சிறந்த கால்நடை வேளாண்மைக்கான பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
எனவே கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் அஞ்சூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாய பெருங்குடி மக்கள் இந்த சிறப்பு கால்நடை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு தங்களின் கால்நடைகளுக்கு உரிய முறையில் சிகிச்சை மேற்கொண்டு பயன்பெற வேண்டுமென கொடுமுடி வட்டார கால்நடை துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!