கோவை -நவ:15
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் கூடலூர் நகராட்சியில் பொது நிதியிலிருந்து
ரூ 1கோடி 41.70 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழாவை கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.
இதில் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார் சாலை அமைத்தல், மழைநீர் வடிநீர் கால்வாய் ,கான்கிரீட் தளம் அமைத்தல், தடுப்புச் சுவர் அமைத்தல், சிறு பாலம் அமைத்தல், கம்பி வேலி ஆகிய பல திட்டங்களை கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு துவக்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் பூவேந்திரன்,நகர மன்ற துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன்,நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம் ,26வது வார்டு கவுன்சிலர் கீர்த்தனா,26 வார்டு செயலாளர் உதயகுமார்,நகர துணை செயலாளர் துரை செந்தில்,கட்சி நிர்வாகிகள்,உறுப்பினர்கள்,நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்