அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், வாலாஜாநகரம் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2025-26-ன் கீழ் 2000 பனை விதைகள் நடுதல் இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி,பனை விதையினை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாட்டின் மாநில மரமாகவும், தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இயைந்த மரமாக விளங்கும் பனை மரங்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் வனபரப்பினை அதிகரிக்கும் வகையிலும் அரியலூர் மாவட்டத்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்கும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கடந்த செப்டம்பர் 2025 தொடங்கி இன்றையதினம் வரையில், அரியலூர் மாவட்ட அனைத்து கிராமங்கள் தோறும், ஏரி, குளங்கள், வரத்து வாரிகள், கிராமச்சாலைகளின் ஓரங்களில் ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்கள், வனத்துறை, வேளாண்மை / தோட்டக்கலைத் துறை, உள்ளிட்ட கள அலுவலர்கள், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர்களை ஒருங்கிணைத்து தற்போது வரையில் 18,50,000 எண்ணிக்கையிலான பனை விதைகள் தொண்டறமாக நடவு செய்து மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் வாலாஜாநகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 எண்ணிக்கையில் பெருந்திரள் பனை விதைகள் நடும் இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, பனை விதையினை நட்டு துவக்கி வைத்தார். மேலும், இயற்கையைப் பாதுகாப்பது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது, பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்குவது போன்ற பசுமையை நோக்கிய நெடும் பயணமாக அரியலூர் மாவட்டத்தில் பனை விதைகள் நடும் பணியானது தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.சிவராமன், உதவி திட்ட அலுவலர் (ஊ/வே) நந்தகோபாலகிருட்டிணன், உதவி இயக்குநர் (ஊரட்சிகள்) பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன், மலர்க்கண்ணன், வனச்சரகர் பழனிசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையைச் சேர்ந்த களப்பணியாளர்களான மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணிமேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!