August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவையில் 4,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றகோவை மாரத்தான்.

கோவை ஆக;24

கோவையில் நடைபெற்ற 7-வது மாரத்தான் போட்டியில் 4,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.4 வயது சிறுவர் முதல் 70 வயது முதியவர்கள் வரை கலந்து கொண்டு உடல்நலத்தையும் சமூக அக்கறையையும் வலியுறுத்தினர்.21 கி.மீ.10 கி.மீ.மற்றும் 5 கி.மீ.என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.15,000,ரூ.10,000 மற்றும் ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த மாரத்தான் மூலம் திரட்டப்படும் நிதி,ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
“Sportzia” நிறுவனம் சார்பில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.