August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில், 10-வது ஆண்டு தடகளப் போட்டி கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்துகொண் டனர். இதில் 12, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் 12 வயதுக்குட் பட்ட மாணவர்கள் பிரிவில்
ரக்ஷன் ஜெய் அஸ்வத், முகேஷ் சாய்ராம், 12 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் சான்விகா, 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கவின் பிரணவ், மாணவிகள் பிரிவில் ஆருத்ரா
சைந்தவி, 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கார்த் தீஸ்வரன், மாணவிகள் பிரிவில் ஜெய் நிதர்சனா, 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் மோகித்சூர்யா
மாணவிகள் பிரிவில் ஹரிணி ஆகியோர் முதலிடம் பிடித்து தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றனர். மேலும், பிரிவுகள் வாரியாகவும் மாணவ, மாணவிகள் வென்றனர். முதல் இரண்டு நாட்களுக்கான நிகழ்வுகள் முடிந்து பரிசளிப்பு விழா
நடைபெற்றது. கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.