August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரிசியில்… அரசியல்…

தரமா.. தரமற்றதா.. ரேஷன் அரிசி குறித்து சட்டசபையில் கடும் விவாதம்..

ஈரோட்டில் நடைபெறும் ரேஷன் அரிசி கட்டத்தலை தடுக்க அரசின் நடவடிக்கை என்ன..?.

ஈரோடு. ஆகஸ்ட். 22

தமிழ்நாடு அரசின் உணவுத்துறையின் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமா தரமற்றதா என சட்டமன்றத்தில் ஒரு நீண்ட கடும் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே எ செங்கோட்டையன், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி ஆடு, கோழி போன்றவை தான் சாப்பிடுகிறது. பொதுமக்கள் பெரும்பாலும் சாப்பிடுவது இல்லை என சட்டமன்றத்தில் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பொது மக்களுக்கு ரேஷன் கடைகளில் 35 கிலோ வரை அரசால் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமற்றதாக இருப்பதாகவும், ஆடு கோழிகள் தான் அவைகளை சாப்பிடுகிறது என்று சட்டமன்றத்தில், உணவுத்துறை மானிய கோரிக்கையின் போது இடைமறித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் கே எ செங்கோட்டையனுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற உணவுத்துறை மானிய கோரிக்கை மீது உணவுத்துறை அமைச்சர் வெங்கடா ரமணன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.

அப்பொழுது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமாக இல்லை என்றும் அரிசியை பொது மக்களுக்கு இலவசமாக அரசு வழங்கினாலும் அதனை பொதுமக்கள் உணவு செய்து சாப்பிடுவது இல்லை என்றும், அந்த அரிசிகள் பெரும்பாலும் ஆடு, மாடு, புலிகளுக்கு தான் உணவாக கொடுக்கப்படுகிறது என்று வருவாய் துறை அமைச்சர் கே எ செங்கோட்டையன் பேசியதற்கு, முன்னாள் திமுக அமைச்சர் கே என் நேரு கடும் கண்டனத்தை தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சராக நான் 30 ஆண்டுகாலம் இருந்துள்ளேன். கடைகளில் விலை உயர்ந்த அரிசியைப் போல் ரேஷன் அரிசி இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு மக்கள் சாப்பிடுவதற்கு நல்லதாகத்தான் இருந்துள்ளது. ஆனால் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் மட்டும் குடிக்கும் செங்கோட்டை எனக்கு ரேஷன் அரிசியை பற்றி எதுவும் தெரியாது என்று தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், சக்கரபாணி, காமராஜ் உள்ளிட்டோரம் அமைச்சர் செங்கோட்டையன் கருத்திற்கு மறுப்பு தெரிவித்து, எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

இதன் காரணமாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமாக இல்லை என்று ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு மூத்த அமைச்சர் பேசியது பெரும் பேசு பொருளாக அன்றைய விவாதத்தில் அமைந்தது.

இறுதியாக உணவுத்துறை அமைச்சர் வெங்கடா ரமணன் பேசும்போது, ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமான முறையில் தான் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இன்னும் நல்ல முறையில் ரேஷன் அரிசியை பொது மக்களுக்கு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று விவாதத்தை முடித்து வைத்தார்.

அதே நேரம் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு அரசு வழங்கும் அரிசி வடமாநிலத்தவர்களுக்கு காசுக்கு விற்கப்படுவதாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தல் காண ஜோராக நடைபெறுவதாகவும், இதனைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் சட்டமன்றத்தில் பேசப்பட்டது.

இந்த அளவில் சட்டமன்றத்தில் ரேஷன் அரிசி தரம், நேரம் இல்லை ரேஷன் அரிசி கடத்தல் ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், ரேஷன் அரிசி கிடைப்பதற்கு அதிகாரிகளே முழுக்க முழுக்க உடனடியாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசி தங்கு தடையின்றி நாள்தோறும் பெரிய அளவில் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது.

பொது மக்களுக்கு இலவசமாக அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசியை ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து பொதுமக்களிடமிருந்து அதனை வாங்கி, ஈரோடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரிசி அரவை ஆலைக்கு கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்து பல லட்சம் ரூபாய் பணம் சம்பாதிக்கும் வேலையில் அந்த ரேஷன் கடத்தல் கும்பல்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக ஈரோடு, கருங்கல்பாளையம், சோலார், மொடக்குறிச்சி, கொடுமுடி மற்றும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் மாபியா கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த சட்ட விரோத செயலுக்கு இதில் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் இந்த மாபியா கும்பலுக்கு உடந்தை.

காரணம் மாதம் லட்சக்கணக்கில் பணத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அந்த அரிசி கடத்தும் மாபியா கும்பல் உரிய தேதியில், பெரும் தொகை கொடுப்பதால் கடத்தல் கும்பலுக்கு விசுவாசமாக சம்பந்தப்பட்ட அந்த துறை அதிகாரிகள் இருக்கின்றன.

இதில் ஏரியா படித்துக் கொள்வதில் இவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அது சட்ட ஒழுங்கை பாதிக்கும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.

ஈரோட்டில் நடைபெறும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், கடத்தல் கும்பலுக்குள் ஏற்படும் போஸ்டி சண்டையால் சட்ட மழுங்கு சீர்கெடும் நிலைமையை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தால் நல்லது.

ரேஷன் அரிசி தரமா, தரமற்றதா என்று சட்டமன்றத்தில் இந்நாள்,, முன்னாள் அமைச்சர்கள் சண்டையிட்டுக் கொள்வது ஒரு பெரிய விஷயம் அல்ல ஆனால் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி ஈரோட்டில் பெரிய அளவில் கடத்தப்படுவதை தடுப்பதுதான் பெரிய விஷயம் என ஈரோட்டு பொதுமக்கள் இந்த அரசை நோக்கி முன் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

அரிசியில் அரசியல் செய்வது தேவையற்றது, பொதுமக்களுக்கு தரமான அரிசியை வழங்க வேண்டும், அரிசி கடத்தப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்.