August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேசிய மக்கள் முன்னணிபத்திரிகை அறிக்கைநாள்: 21.08.2026

தென் மண்டல கவுன்சில் மாநாட்டில் முதல்வர் பங்கேற்காதது அரசியல் அமைப்புச் சட்ட விதி 239A-க்கு எதிரானது – ஆளுநர் ஆட்சி நடத்துகிறாரா? – கா.சிவா கடும் கண்டனம்.

சென்னை கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென் மண்டல கவுன்சில் மாநாட்டில் (Southern Zonal Council under Section 15 of States Reorganisation Act, 1956) புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்காமல், நியமன ஆளுநர் பங்கேற்றிருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என தேசிய மக்கள் முன்னணி சார்பாக கடுமையாக கண்டிக்கிறேன்.

சட்ட வரையறைகள்:

1. States Reorganisation Act, 1956 – Section 16(1)(d): தென் மண்டல கவுன்சிலில் யூனியன் பிரதேசத்தின் சார்பாக முதல்வரும், ஆளுநரும் உறுப்பினர்கள். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டியது முதல்வர் தான்.

2. Constitution of India – Article 239A & Govt of UTs Act, 1963 – Section 44: புதுச்சேரிக்கு சட்டமன்றம் உள்ளது. சட்டமன்றத்திற்கு பொறுப்பான அமைச்சரவையே நிர்வாக அதிகாரம் படைத்தது. ஆளுநர் பெயரளவு தலைவர் மட்டுமே. இது உச்சநீதிமன்றத்தின் Delhi Govt vs LG (2018) தீர்ப்பிற்கு எதிரானது.

3. மாணவர்கள் – இளைஞர்களுக்கு இழப்பு:
இந்த மாநாட்டில் தொகுதி மறுவரையறை, நீட் விலக்கு, காவிரி நீர் பங்கீடு, மாநில அந்தஸ்து போன்ற புதுச்சேரி இளைஞர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு MP சீட் 30% குறையும் அபாயம் உள்ளது. புதுச்சேரியின் ஒரே MP சீட் என்ன ஆகும் என்பதை முதல்வர் தான் கேட்க வேண்டும். ஆளுநர் கேட்க மாட்டார்.

முதல்வர் ரங்கசாமி விமான பயணத்தை தவிர்ப்பதும், சனிக்கிழமை பூஜையை காரணம் காட்டி NITI Aayog, NDA கூட்டங்களை புறக்கணிப்பதும் புதுச்சேரி மக்களுக்கு செய்யும் துரோகம் என்பதை எப்போது உணர்வீர்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைக்குமா?

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு உரிமை அளிப்பாரா? என்ற கேள்வியையும் முன் வைக்கிறோம்.

இப்படிக்கு,
கா.சிவா
பொதுச்செயலாளர்,
தேசிய மக்கள் முன்னணி,
புதுச்சேரி.