August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோட்டில் டாக்டர்களின் விழிப்புணர்வு பேரணி

ஈரோடு ஆகஸ்ட் – 21

ஈரோடு மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள் சங்கம் ( EOGS) சார்பில் ஈரோட்டில் ABHAYA DAY -2026 என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியையொட்டி முன்னதாக, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்தும்
மருத்துவர்களின் பாதுகாப்பு, மரியாதை கண்ணியம் ஆகியவற்றை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு பேரணிக்கு சங்கத் தலைவர் டாக்டர் பூர்ணிமா தலைமை வகித்தார்.

இப்பேரணியில், மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை தடுப்புக் குழுத் தலைவர் (FOGSI ) டாக்டர் உமையாள் முருகேசன் , EOGS சங்க செயலாளர் டாக்டர் வாணி மாதவன் , முன்னாள் தலைவர் டாக்டர் நான்சி, இந்திய மருத்துவ சங்கம் (IMA) ஈரோடு கிளை தலைவர் டாக்டர் அரவிந்த், டாக்டர் கௌரிசங்கர்,டாக்டர் நவீன், தேசிய IMA டாக்டர் அபுல்ஹசன், டாக்டர் ராஜா, டாக்டர் சுகுமார், ஈரோடு லோட்டஸ் ஹாஸ்பிடல் டாக்டர் உஷா, மாருதி மெடிக்கல் சென்டர் டாக்டர் ரேவதி, டாக்டர் தரணி, டாக்டர் லட்சுமி, டாக்டர் சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பேரணி ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள காலிங்கராயன் இல்லம் அருகே துவங்கி ஐ.எம்.ஏ. ஹால் அருகே நிறைவடைந்தது.