மணமேல்குடி,
ஆக20 புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த மரவாங்கேணி கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழா நடைபெற்றது.
வக்ப் வாரிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ் கனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்.
தஞ்சை மறைமாவட்ட ஆயர் டி. சகாயராஜ் தலைமையேற்று அந்தோனியார் ஆலயத்தை திறந்தார். தொடர்ந்து ஆலய கொடியேற்றிய ஆயர் திருப்பலியை துவங்கி வைத்தார். ஆலயம் திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜமாஅத் தலைவர் பிரியம் காதர், நவாஸ்கான், அஜ்மல் கான், பங்குதந்தையர்கள் மற்றும் சுற்றுவட்டார பொது மக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கிராமத் தலைவர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். பிரவீன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர் பழனிவேல்

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…