August 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவை”இயற்கை சுவாசம்” அமைப்பிற்கு சிறந்த சமூக சேவை விருது வழங்கி கௌரவிப்பு

கோவை ஆக:19

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமி செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சமூகத்தில் சிறப்பாக இயங்கி வரும் சமூக சேவை அமைப்பான “மேக்ஸ்வெல் அறக்கட்டளை” அமைப்பின் 5ம் ஆண்டு துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இதில் சமூகத்திற்கு சமூக சேவை செய்யும் மற்ற அமைப்புகளை ஊக்குவிக்கும் விதமாக தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் “இயற்கை சுவாசம்” என்ற பெயரில் மிகச் சிறப்பாக சமூக சேவை புரிந்து வரும் அதன் இயக்குனர் மா.பிரேம்குமார் அவர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த விருதை மேக்ஸ்வெல் அறக்கட்டளை நிறுவனர் முருகன் மற்றும் விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அறக்கட்டளை நிறுவனங்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி பின்,உடல் ஊனமுற்றோர் பள்ளி குழந்தைகள்,ஏழை எளியோர்கள் என பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்ட து.

உடன் “இயற்கை சுவாசம்” சமூக சேவை நிர்வாகிகள் அலெக்ஸ் மற்றும் சங்கர் கலந்து கொண்டார்கள்.