295 மனுக்கள் பெறப்பட்டு மேல் நடவடிக்கைக்கு உத்தரவு..
ஈரோடு. நவ, 11
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 295 மனுக்கள் பெறப்பட்டு மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாரம் தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் நேற்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்ச. கந்தசாமி தலைமை வகித்தார்.
இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து பொதுமக்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் வந்து தங்களின் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுத்தனர்.
அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து மனுக்கள்.
அந்த மனுக்களின் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா கோருதல், முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, கலைஞரின் மகளிர் உதவித்தொகை மற்றும் மாற்று மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகை, காவல்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் கொடுத்தனர்.அதன் அடிப்படையில் மொத்தம் 295 மனுக்கள் வரப்பெற்று மேல் நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பிலும், பல்வேறு உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஈரோடு ஆட்சிய ச. கந்தசாமி ஈரோடு ஆட்சியர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தீவிர வாக்காளர் சிறப்பு சேர்க்கை பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த போர்டில் எஸ் ஐ ஆர் குறித்த விழிப்புணர்வு வாசகத்தை எழுதி கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து பொதுமக்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து கையொப்பமிட்டனர்.
இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட வழங்கவ் அலுவலர் ராம்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!