வந்தவாசி, ஆக 01:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி(வடக்கு )மாணவர்களுக்கான கற்றல் செயல்பாடுகள் நிகழ்வில் காகித மடிப்பு கலைகள் பற்றிய செயலாக்க பயிற்சி நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை வி.சுகன்யா தலைமை தாங்கினார். சி.ம.புதூர் கிளை நூலகர் ஜா.தமீம் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் பங்கேற்று, மாணவர்கள் அடிப்படை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் காகித மடிப்பு கலைகள் பற்றிய செயல்பாடுகளை வானவில் மன்ற பொறுப்பாளர் தினேஷ் குமார் வழங்கினார். மேலும் மாணவர்கள் அறிவியல் சார்ந்த செயல்பாடுகளையும், காகித வடிவமைப்பு உருவங்களையும் தாங்களே செய்து மகிழ்ந்தனர். பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

More Stories
ஜோய்ஆலுக்காஸ் வழங்கும்‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’புதுச்சேரி ஷோரூமில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 16 வரை
திருவரங்கத்தில் இன்று பரபரப்பு சம்பவம்
NEET-ல் 16 மருத்துவ இடங்கள்… NIT-களில் 20-க்கும் மேற்பட்ட சேர்க்கைகள்; புதுச்சேரியில் வேதாந்து ஆச்சாரியாவின் சாதனை