June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி வில்லியனூர் தொகுதி ஆதிதிராவிட பயனாளிகளுக்குதிருமண உதவித் தொகைக்கான ஆணைஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !

புதுச்சேரி அரசின் ஆதிதிராவிட நலத்துறை மூலம் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வில்லியனூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட பயனாளிகள் 9 பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் வீதம் உதவித் தொகைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
இதில், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு, தொமுச தலைவர் அங்காளன், ஆதிதிராவிடர் நலக்குழு செல்வநாதன் என்கிற ஆறுமுகம், சிறுபான்மையினர் நலப்பிரிவு முகம்மது ஹாலிது, அவைத்தலைவர் ஜலால் ஹனீப், ஆதிதிராவிடர் நலக்குழு துணைத் தலைவர் கதிரவன், துணை அமைப்பாளர் காளி, தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் மனோகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.