வந்தவாசி, ஜூலை 28:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை என்.பி. ரேவதி தலைமை தாங்கினார். கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ.கேசவராஜ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ப.சக்ரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலர் கோ.குணசேகரன் பங்கேற்று, கலாமின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூர்ந்தார். மேலும் மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாம் போல சாதனை மாணவர்களாக திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கலாம் நினைவுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் கலாம் உருவம் பொறித்த முகமூடி அணிந்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியைகள் டி.சாந்தி, ஆர்.கோவிந்தராஜன், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ.ஷாகுல் அமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இறுதியில் பள்ளி ஆசிரியர் ஆர்.செந்தில் குமார் நன்றி கூறினார்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!