July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அறந்தாங்கி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி AITUCஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர் சங்கம்
சார்பாக அரசுக்கு கோரிக்கை மனு அளித்திடும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்
தமிழ்நாடு அரசே ஆட்டோ செயலி ஆப்பை உடனே துவங்கிடு! ஆன்லைன் அபதாரத்தை ஆட்டோ மோட்டார் வாகனங்களுக்கு விலக்கு கொடு!,. ஆந்திரா, பாண்டிச்சேரி மாநிலங்களில் வழங்குவது போல் ஆட்டோ மற்றும் மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு எப்சி காலங்களில் ரூபாய் 10,000 நிவாரணம் வழங்கிடு!. ஆட்டோ தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் சட்டத்திற்கு புறம்பாக ஓடும் பைக் டாக்ஸி டூவீலர்களை தடை செய்.! 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டார் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூபாய் 30 மற்றும் அதிகபட்சம் ரூபாய் 60 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்!. சவாரி செல்லும் ஆட்டோக்களுக்கு மாவட்ட எல்லை கடக்க அனுமதி கொடு அபதாரம் விதிக்காதே!. நலவாரியம் மூலம் பண்டிகை காலங்களில் போனஸ் வழங்கிடு 60 வயது முடிந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு பென்சனை ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்கிடு.! தமிழ்நாடு அரசே முத்தரப்பு கமிட்டி அமைத்திடு என வலியுறுத்தி. மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்திடும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
மாவட்ட பொதுச் செயலாளர் பா.பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ..பெரியசாமி, நகர தலைவர் .சேகரன், நகர செயலாளர் கே.கார்த்திக், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர், ஆர்ப்பாட்டத்தில் AITUC கௌரவத் தலைவர் ஏ.ராஜேந்திரன் சிறப்புரை ஆற்றினார், கலந்து கொண்டவர்கள்: CPI ஒன்றிய செயலாளர் இரா.ராதாகிருஷ்ணன், AIYF ஒன்றிய செயலாளர் கா.பாலசுப்ரமணியன், AIYF நகரச் செயலாளர் எஸ்.சிவக்குமார், ஆட்டோ குமார், சுப்பிரமணியன் சித்திக், செந்தில்குமார், வைரவன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் பழனிவேல்