July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் அம்மச்சார் அம்மன் கோவிலில் 13 ஆம் ஆண்டு ஆடி பெருவிழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை வடக்கு தாங்கள் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அமைச்சர் அம்மன் திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு ஆடி திருவிழா நடைபெற்றது .
முன்னதாக வெள்ளிக்கிழமை ஆடி பெருவிழா கணபதி ஹோமத்துடன் பந்த கால் நடுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது
சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் ஆராதனை அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து சிலம்பம் கம்பம் மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சி தொடங்கியது இதில் பால்குடம் மற்றும் முளைப்பாரிக்கு குறிஞ்சிப்பை தண்டாயுதபாணி கோவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சிவாத்தியங்கள் முழங்க 600 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஏரிக்கரை வழியாக அம்மச்சார் அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர் தொடர்ந்து மதியம் கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கூழ் எடுத்து வந்து அம்மனுக்கு படையல் இட்டு கூழ் வார்த்தல் நடைபெற்றது
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது .
நிகழ்ச்சி ஏற்பாட்டினை வடக்க தாங்கள் அம்மச்சார் அம்மன் அறங்காவலர் குழு செய்திருந்தது