July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கார்பன் பேப்பர் வாங்கி வந்தால்தான் சிகிச்சை? – காவேரிப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உறவினரிடம், “கார்பன் பேப்பர் தீர்ந்துவிட்டது. முதலில் கார்பன் பேப்பர் வாங்கி வாருங்கள்; அதன் பிறகுதான் சிகிச்சை பார்க்க முடியும்” என்று அங்கு பணியில் இருந்த செவிலியர் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, நோயாளியின் அண்ணன் வெளியே சென்று கார்பன் பேப்பர் வாங்கி வந்து செவிலியரிடம் கொடுத்த பின்னரே சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “அரசு மருத்துவமனையில் கார்பன் பேப்பர் போன்ற அடிப்படை அலுவலகப் பொருட்களைக்கூட வாங்க நிதி இல்லையா?” என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: முபாரக்