July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலம்!

செஞ்சி, ஜூலை 17

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ல் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு, ஆனி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ல நடைபெற்றது. இதை 3 முன்னிட்டு அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் 5. உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கொண்டு ள் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடை பெற்றது. தொடர்ந்து அங்காளம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது.

தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பல வித மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம்

செய்யப்பட்டு இருந்தது. இரவு 11:00 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அப்போது, ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர் கள் தீபம் ஏற்றி அங்

காளம்மா, அங்காளம்மா என, கரகோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, இரவு 12:10 மணிக்கு, ஊஞ்சல் உற் சவம்முடிந்து, அம்மனுக்கு தீபாராதனை நடைபெற் றது. இதை அடுத்து, உற் சவர் அங்காளம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

ஊஞ்சல் உற்சவத்தில்,

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், விழுப்புரம் மாவட்ட நீதிபதி மணிமொழி, விழுப்புரம் சகடி ஐ.ஜி., அருள் அரசு, மாவட்ட எஸ்.பி., மதிவாணன், சென்னை ஆலந்தூர் எம்.எல்.ஏ., ஹரீஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவ லிங்கம் மற்றும் விழுப்

புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணா மலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறுமாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடு களை இந்து சமய அற நிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலை யனூர் சக்திவேல், அறங் காவலர்கள் பச்சையப்பன், சுரேஷ், மதியழகன், ஏழு மலை, சரவணன், வடி வேல், சந்தானம், மேலா ளர் சதீஷ், கணக்கர்மணி உள்ளிட்ட கோவில் பணி யாளர்கள் செய்திருந்தனர்.